Multiverse of Learners - Tamil

 Multiverse of Learners

- Type of learning style

Multiverse of Learners - Just Knowing Psychology

சமீப காலங்களாக பரவலாகப் பேசப்பட்டு வரும் ஓர் அறிவியல் சொற்றொடர் Multiuniverse or Multiuniversal ஆகும். இந்த Multiuniverse  கோட்பாடை எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் நம்மை போலவே சிறு சிறு வேறுபாடுகளுடன் வேறு ஒரு பிரபஞ்சத்தின் வேறு பகுதிகளில் இருக்கிறது என்பதாகும் என்று எண்ணுகிறேன். இதுபோலவே நம்முடைய கற்றல் செயல்முறையின் அடிப்படையில் மனிதர்களை வகைப் படுத்த இயலும், உதாரணமாக Marvel movie - ல் வரக்கூடிய IRON MAN கதாபாத்திரமானது Dony Stark Ironman, Tom Cruise Ironman, Zoimbie Ironman மற்றும் Steave Rogers Ironman என பல்வேறுவிதமான ironman variant - கள் உள்ளன என்ற கருத்தை சமீபத்தில் வெளிவந்த WHAT IF எனும் இணையத் தொடர் மூலமாக உறுதி செய்துள்ளது. இதுபோலவே கற்றல் முறையின் மூலமாக நம்மால் LEARNERS - ஐ வகைப் படுத்த இயலும், என்னென்ன விதமான Type of learners (Learning Style)   உள்ளன, இந்த Type of Learners நம்முடைய தினசரி வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் Multiuniverse  கோட்பாடு உடன் இந்த Typr of Learners எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதைப்பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.


Learning:

அனைத்து உயிரினங்களுக்கும் கற்றல் என்பது அத்தியாவசியமானதாகும். டார்வின் அவர்களின் கூற்றுப்படி  Servival of the Fitdesest - ல் தங்களின் வாழ்வியலுக்கான முதன்மை இயக்கமாகவும் இந்த கற்றல் (Learning) உள்ளது. மேலும் கற்றல் என்பது வகுப்பறைக்குள்  மட்டுமே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் நமது வாழ்வில் ஒவ்வொரு நடவடிக்கையும் மன எண்ணங்களும், நம்முடைய Past Experience - யை சார்ந்து அமைகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் உளவியல் நிபுணர்களால் இதுவும் ஒரு கற்றல் செயற்பாடாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் “கல்வி என்பது வகுப்பறையை தாண்டியும் நடைபெறக்கூடிய அடிப்படை செயல்பாடு என்பதை அறியலாம் எனினும், இந்த கற்றல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற விலங்குகளுக்கும் பொதுவானது ஆகும். நாம் புதியவற்றை கற்றுக் கொள்வது போல விலங்குகளும் கற்றுக் கொள்கின்றன. ஆனால் கற்றல் அளவுகளில் பல்வேறு மாறுபாடுகள் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது எனினும்  இந்த கற்றல் செயல்பாடானது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று, உதாரணமாக தற்போது அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய இடையூறாக இருக்கக் கூடிய Corona  வைரஸ் கூட தன்னுடைய உடலமைப்பை அது செல்கிற நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு, அங்குள்ள மக்களுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு தன்னை நிலைநிறுத்திக்  கொள்ளவும் கற்றல் என்பது அடிப்படையாக உள்ளது. ஆனால் இது நம்முடைய கற்றலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இவற்றிலிருந்து  கற்றல் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை கருத்துக்கள் என்னவென்றால்,


  • கற்றல் என்பது வகுப்பறைக்குள் அடக்கிவிட இயலாத அத்தியாவசியமான கூறாக உள்ளது.


  • இந்த கற்றல் ஆனது மனிதர்கள் மட்டுமல்லாமல் உலகில் வாழும் பல்வேறு உயிரினங்களுக்கும் பொதுவானது.


  • அனைத்து உயிரினங்களுக்கும் கற்றல் என்பது பொதுவாக அமைந்தாலும், ஒவ்வொரு உயிரினங்களுக்குமான கற்றல் என்பது அவைகளுக்கு உண்டான தனித்த இயல்புடன் உள்ளது.


                     

Learners:

இவ்வாறு கற்றல் உள்ளது எனில், கற்றல் என்ற செயல்பாட்டிற்கு அடிப்படையாக தேவைப்படுவது ஒன்றேயாகும். அது கற்றலை மேற்கொள்பவர் (Learner). இந்த Learner- ருடைய சமூக காரணிகள் சில சமயங்களில் இந்த கற்றலுக்கு துணை புரியும் காரணிகளையும் (Education), துணை புரியும் மற்ற நபர்களையும் (Teacher) அவருக்கு வழங்கலாம். 


உதாரணமாக,

மாணவன் ஒருவன் Viedo Editing - யை கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் காணப்படுகிறார் எனில் அந்த மாணவன் Learner  ஆவர், அவருடைய கற்றல்  செயல்பாட்டிற்கு சில சமயங்களில் அவருடைய சமூக காரணிகள் (Editing course) மூலமாக அந்த மாணவன் Viedo Editing Course -ல் கலந்து கொள்வதன் மூலமாக  அவருடைய கற்றல் ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இல்லை என்றால் Viedo editing  தொடர்பான இணைய காணொளிகளை youtube - ன் உதவியுடன் கண்டு அந்த Viedo Editing - யை கற்றுக்கொள்ள முடியும். இல்லையென்றால் ஏற்கனவே அந்த Viedo Editing - யை கற்ற முன்னாள் மாணவர்கள்  அல்லது அதில் நிபுணத்துவம் பெற்ற நபர்களிடமிருந்து இதனை கற்றுக் கொள்ள இயலும். இதற்கும் வாய்ப்பு இல்லை என்றால் “தானாகவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு (Trial & Error Learning) இந்த Viedo Editing - யை கற்றுக்கொள்ள முடியும்.  இது  போன்று கற்றல் எனும் செயல்பாட்டிற்கு  அதனை  கற்கும் நபர் ( The Learner) மட்டுமே போதுமானவர் ஆவார், எனினும் அவருடைய சூழ்நிலை காரணிகள் அந்த கற்றலில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியவை என்னவென்றால்


  • கற்றல்  செயல்பாடானது, அந்தக்  கற்றல் மேற்கொள்ளும்  நபரை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது.


  • கற்றல்  செயல்பாட்டில் சில சமூகக் காரணிகள் (Teacher, Mentor, Finaciual background, and ect..) குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.



The Learned Process of Hunting

மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்களை மையமாகக் கொண்டு நாம் சிந்திக்கும் பொழுது கற்றல் என்பது பரவலாக அனைத்து உயிரினங்களிலும் வெவ்வேறு நோக்கங்களுக்காக, வெவ்வேறு முறைகளில் அமைகிறது எனினும். இந்த கற்றலுக்கு அத்தியாவசிய காரணியாக இருப்பது அந்தக் கற்றலை மேற்கொள்ளும் நபர் (Learner) மட்டுமே  ஆவார் எனில். அந்த நபர் தன்னுடைய கற்றலை முழுமைப் படுத்துவதற்காக பல்வேறு உத்திகளைக் கையாள்வார். அந்த உத்திகள் ஒவ்வொரு நபர்களுக்குமே வேறுபட்டு காணப்படும். அந்த உத்திகளை கையாளும் பொழுது, அந்த நபரால் தன்னுடைய கற்றலின் இலக்கை சுலபமாக பெற இயலும். மேலும் அந்த நபர் தனக்கு பொருத்தமில்லாத அல்லது கடினமாக இருக்கக் கூடிய உத்திகளை கையாளும் பொழுது அதே  கற்றலின் இலக்கை அடைவது அந்த நபருக்கு கடினமான செயலாக இருக்கும்.


உதாரணமாக 


ஒவ்வொரு விலங்கிற்கும் வேட்டையாடி உணவை பெறுவது என்பது பொதுவான செயல் எனினும், ஒவ்வொரு உயிரினங்களும் அதனுடைய இலக்கை இலகுவாக அடைய வெவ்வேறு யுத்திகளை அவற்றின் முந்தைய கால கற்றலின் மூலம் மேற்கொள்கிறது. 


  • சிங்கம் பொதுவாக அதனுடைய கூட்டத்தோடு சென்று தன்னுடைய இறையை வேட்டையாடி உணவை அடையும்.  

  • சிறுத்தை புலி போன்ற உயிரினங்கள் தனித்து சென்று வேட்டையாடி அதனுடைய உணவைத் தேடும். 

  • முதலை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் அதைவிட அதிக பலம் கொண்ட விலங்குகளையும் எளிதில் வேட்டையாட அதற்கே உண்டான யுக்தியை கையாள்கிறது.


    அதாவது நீர்நிலைகளுக்கு தண்ணீர் அருந்த வரும் உயிரினங்களை நீருக்குள் இழுத்துச் சென்று, அதனை கொன்று தனது இறங்குகிறது. ஏனெனில் முதலையை விட அதிக அளவு பலம் கொண்ட விலங்குகளும் நீருக்குள் முதலையை எதிர்கொள்ள முடியாமல் திகைத்துப் போகும். இந்த உயிரினங்கள் தங்களின் இலக்கை அடைய வேறு உயிரினங்களின் வேட்டை உத்தியைக் கையாண்டாள் இறையை பெறுவது என்ற இலக்கானது அவர்களுக்கு மிகுந்த கடினமான செயலாக இருக்கும்”. ஏனெனில் வேட்டை எனும் இலக்கு ஒன்றாக இருப்பினும், அதனை அடைவதற்கு தங்களுக்கே உரித்தான தனித்த இயல்புகளுடன் செயல்படும் பொழுது அந்த உயிரினங்கள் சிறப்பாக செயல்படும். இது போலவே தான் மனிதர்களான நாமும் கற்றல் எனும் செயல்முறைக்கு அவர்களுக்கே உண்டான சில உத்திகளை கையாள்கிறோம்.


Multiverse of Learners - Just Knowing Psychology

மனிதர்களுடைய  கற்றல் செயல்பாடு பல்வேறு பரிணாம வளர்ச்சி அடைந்து, பல்வேறு சமூக மாற்றங்களுக்கு அப்பால் புதிய பரிணாமத்தில் நடைமுறையில் உள்ளது எனினும், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கற்றலுக்கான அடிப்படை காரணிகளும் நமக்கும் பொருந்த கூடியது ஆகும். தற்போது உள்ள Information Age - ல் கற்றல் என்பது முறைப்படுத்தப்பட்ட கல்விக்கூடங்களை தாண்டியும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற நிபுணத்துவம் பெற்ற மனிதர்களால் விரிவடைந்து நமது வாழ்வுடன் ஒன்றிணைந்து மிக முக்கிய பங்காற்றுகிறது. இருப்பினும் அனைவராலும் இந்தக்   கற்றலை அனைத்து இடங்களிலும் திறம்பட கையாள இயலவில்லை, அதற்கான காரணம் நாம் அனைவரும் நம்முடைய தனித்துவமான உத்திகளை இன்னும் கண்டறியவில்லை, கண்டறிந்து இருந்தாலும் அந்த உத்திகளை முறையாக பயன்படுத்தவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”. பொதுவாக மனிதர்களின் கற்றல் செயல்பாடு அந்த நபர்கள் (Learners)  எவ்வாறு கற்றலை மேற்கொள்கிறார்கள் என்பதை பொருத்து மூன்று விதங்களில் பிரிக்கப்படுகிறது. அவை,


i) Visual Learners 

பொதுவாக இந்தவகை கற்கும் திறன் உடைய நபர்கள் எதையும் பார்த்து அதனை சிந்தித்து பின் புரிந்து கொண்டு கற்கும் முறையை இயல்பாக கொண்டிருப்பார் இந்த நபர்களை பொறுத்தவரையில் கற்றல் செயல்பாட்டில் பார்வை புலம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்”. உதாரணமாக ஒரு சிலருக்கு நாம் கற்கவேண்டிய பாடப் பகுதியை மீண்டும் மீண்டும் வாசித்து வந்தால் மட்டுமே எளிதில் புரிந்துகொண்டு கற்க இயலும். மேலும் இது போன்ற கற்றல் முறையை இயல்பாக கொண்டுள்ள மாணவர்களுக்கு என பிரத்யேகமாக அவர்கள் கற்கும் பொழுது Diagram, flow chart, பாடம் சம்பந்தமான Viedo clips, images மற்றும் flash cards  போன்றவை பயன்படுத்துவது அதிக அளவு பயன் தரக்கூடும். மேலும் இந்த மாணவர்களின் கற்றல் செயல்முறையில் புத்தகங்களுக்கு தவிர்க்க இயலாத பங்கு இருக்கும்.


இத்தகைய நபர்கள் Air traffic controller, Animator, Architect, Bookkeeper, Data scientist, Driver, Graphic designer, Interior designer, Photographer/Videographer, மற்றும் Pilot ஆகிய பணிகளை  இவர்களால் குறைந்த அளவு முயற்சியில் அதிகத் திறனுடன் பணியாற்ற முடியும்.


ii) Auditory Learners

இந்த வகையான  கற்றல்திறனுடைய நபர்கள் இயல்பாகவே சப்தங்களுக்கு எதிர்வினையாற்ற கூடியவர்கள் ஆவார்கள் அவர்கள் கற்கும் பொழுது அவர்களுடைய செவித்திறன் ஆனது மிக முக்கிய பங்கு வகிக்கும் இவர்கள் தகவல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுது அதனை எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டு இருப்பர். இத்தகைய நபர்கள் கற்க வேண்டிய பகுதிகளை ஒலிநாடா அல்லது ஒலி வடிவில் கற்றலில் ஈடுபடும் பொழுது அவர்களுக்கு இது எளிதான ஒன்றாக அமையும். இவர்கள் பொதுவாக புத்தகங்கள் படிப்பதை விட Audio book  அதிக அளவில் கேட்பார்கள். மேலும் பாடல்களின் மீது அதிகளவு நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இயல்பாகவே இந்த வகைகளை திறனுடைய நபர்கள் எளிதாக கற்க வேண்டுமானால், தான் கற்கவேண்டிய பகுதிகளை பாடல் வடிவில் மாற்றி கற்கும் பொழுது அதிகளவு பலன்களை தரும். உதாரணமாக நம்முடைய சிறுவயதில் உள்ள பாடங்களில் பெரும்பாலானவை நமக்கு பாடல் வடிவிலேயே இருந்திருக்கும். மேலும் Videos or podcasts, Having them read aloud, Using rhymes, and Group discussions ஆகியவையும் இவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவை இந்த வகை கற்கும் திறன் உடைய நபர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.


இந்த வகை கற்கும் திறனுடைய நபர்கள் Guidance counselor, Journalist, Sales professional, Sound engineer, Teacher, Translator, Tutor, மற்றும் Music-related professionals ஆகிய பணிகளை இவர்களால் குறைந்த அளவு முயற்சியில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக திறனுடன்  செய்ய இயலும்.

iii) Kinaesthetic Learners

இந்த வகை கற்றல் திறன் உடைய நபர்கள் பொதுவாக உடல் இயக்கங்கள் அசைவுகள் மூலமாக கற்கும் திறன் உடையவர்களாக விளங்குவார்கள். மற்றவர்களை காட்டிலும் இந்த நபர்கள் கற்றல் செயல்பாட்டின் பொழுது உடல் இயக்கங்கள் மூலம் கற்றுக் கொள்ளும் இயல்பு உடையவராக இருப்பார்கள். மேலும் இவர்களை பொருத்தவரை கற்றல் செயல்பாடுகள் செயல் வடிவமாக (Learning through Activities)  மாற்றப்படும் எனில்  இவர்களால் அதனை எளிதில் கற்றுக்கொள்ள இயலும்.மேலும் இத்தகைய கற்றல் திறன் உடைய நபர்களுக்கான செயல்முறைகளும் கல்விக்கூடங்களில் உள்ளன. உதாரணமாக Abacus method, Learnign through activities போன்ற செயல்பாடுகள் இந்த வகை நபர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும் அறிவியல் பாடங்களில் அவர்கள் படிக்கக்கூடிய பகுதிகளை Demonstract  செய்து காட்டும் பொழுது அவர்களால் எளிதில் அதனை கற்றுக் கொள்ள இயலும். மேலும் இத்தகைய நபர்கள் Sports, Gymnastics    போன்றவற்றில் இயல்பாகவே சிறந்து விளங்கும் திறன் உடையவர்களாக இருப்பார்கள்.


இந்த கற்கும் திறன் உடைய நபர்கள் Chef, Dentist, Electrician, Horticulturist, Hospitality professional, Physical therapist,மற்றும் Stylist ஆகிய துறைகளில் குறைந்த அளவு முயற்சியில் பிறரை விட அதிக திறனுடன் செயல்பட இயலும்.



Unity in Diversity:

நம்முடைய கற்றல் திறன் என்பது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையில் ஏதேனும் ஒன்றுதான் என்று கூறிவிட இயலாது. ஏனெனில் பெரும்பாலான நபர்கள் அனைத்து விதமான கற்றல் முறைகள் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர். எனவே எந்த கற்றல் முறையானது  பிறவற்றை காட்டிலும் அதிக அளவு பயன் உள்ளது என்பதை அறிந்து, அதில் மேலும் பயிற்சி செய்யும் பொழுது  கற்றல் செயல்முறையானது எளிதாக அமையும். எனினும் கூடுதலாக பிற  வகை கற்றல் செயல்முறைகளையும் பயன்படுத்துவது அதிக அளவு பயன் தரக்கூடியதாக இருக்கும்.


மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகள் Walter Burke Barbe அவர்களால், 1981ல் வரையறை செய்யப்பட்டவையாகும். மேலும் அதற்குப் பின்பாக இத்தகைய கற்றல் முறை பற்றிய பல்வேறு கோட்பாடுகள் மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வகை கற்கள் திறனுடைய நபர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர் எனினும், Barbe கூறியுள்ள இந்த மூன்று வகையான கற்றல் திறனுடைய நபர்கள் கோட்பாடு இன்றளவும் இன்றியமையாததாக உள்ளது.



How they Defeat the Super-Villains:


Multiverse of Learners - Just Knowing Psychology

Marvel Studio -வின் திரைப்படத்தில் வெவ்வேறு Universerse ல் இருந்து வந்த 3 Spiderman’s ஒன்றாக இணைந்த அவர்களின் ஐந்து முக்கியமான எதிரிகளை எதிர்கொள்வதை போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதனை சற்று சிந்தித்துப் பார்த்தால் Spiderman   அந்த Super villan -களை தனித்தனியாக தோற்கடிப்பது என்பது கடினமான காரியமாக  அவர்களுக்கு இருந்தது,  அதிக அளவு முயற்சி செய்த  பின்புதான் villan -களை இவர்களால் தோற்கடித்த முடிந்தது. அவ்வாறு இருக்கும்பொழுது 3 Spiderman’s  அவர்களின் 5 Super Villan   கலை எப்படி தோற்கடிக்க முடியும்? என்ற கேள்வி எழும்புகிறது. இதற்கு பதில்  அந்த திரைப்படத்திலேயே இருக்கும், ஒவ்வொரு Spiderman -னும் அவர்களுக்கு உண்டான சிறப்பான இயல்புகளை கொண்டிருந்தனர். உதாரணமாக கூற வேண்டுமென்றால் Tobey Maguire spiderman அதிக அனுபவம் உள்ள நபர் மேலும் பல எதிரிகளை தோற்கடித்த அனுபவங்கள் அவரிடம் உள்ளது. Thom Holland Spiderman Ironman உதவியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களை அவருக்கு உதவுவதற்காக வைத்துள்ளார். இது போன்று ஒவ்வொருவரும் அவருக்கே உண்டான தனித்திறமைகளை ஒருங்கிணைத்து எதிர் கொண்டதால் அவர்களுடைய 5 Super villan கலையும் வில்லன்களையும் எளிதில் தோற்கடிக்க முடிந்தது. இது போலவே நாமும் நம்முடைய கற்றல்திறன்  பற்றி அறிந்து  அதில் சிறப்பாக விளங்கும் பொழுது நம்முடைய  கற்றல் செயல்முறையானது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். 


         Psychology of Success

    இவ்வாறு Multiuniverse கோட்பாட்டில் காணப்படும், பல்வேறு விதமான (varient)  ஒரே கதாபாத்திரங்களைப் போல (Ironman) நம்முடைய கற்றல் திறனும் ஒவ்வொரு நபர்களுக்கும் மாறுபட்டு காணப்படுகிறது. Multiuniverse -ல் உள்ள   ஒவ்வொரு Ironman Varient -ம் சில தனிச்சிறப்புகள் அல்லது பிரத்தேக பண்புகளை கொண்டு காணப்படும். அது போலவே நம்முடைய கற்றல் முறையானது அனைத்து மனிதர்களுக்கும் வேறுபட்டு காணப்படும். நம் ஒவ்வொரு நபரின்  கற்றல் செயல்முறையானது நம்முடைய சமூகம் பழக்கவழக்கங்கள், நம்முடைய புறச்சூழல், சிந்தனை மற்றும் கற்பனைத்திறன் என பல்வேறு காரணிகளை சார்ந்து மாறுபடுகிறது. இதன் மூலமாகவே மேலே குறிப்பிட்டுள்ளது போலஅனைவரின் கற்றல் செயல்பாடு ஆனது, ஒவ்வொருவருக்கும் தனித்துவமான முறையில் அமைந்துள்ளது. எனவே நாமும் நம்முடைய தனிச்சிறப்பான கற்றல் செயல்பாடு எது என அறிந்து அதன் மூலம் கற்றலை மேற்கொள்ளும் பொழுது நம்மால் எளிதில் சிறப்பாக அன்றாட கற்றல் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள முடியும்.

Comments

Popular Posts

Psychology of Success (Untold - I) English

Psychology of Success: (Full Article) English

Psychology of Success (Untold - II) English