Psychology of Success: (Full Article) Tamil

 

 Psychology of Success: (Full Article) Tamil

Success Behind the losers:


Richard Branson அவர்களின் சாதனையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக அளவில் வர்த்தக ரீதியிலான விண்வெளி சுற்றுப்பயணம் என்பதை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய பெருமை என்பது இவரின் வெர்ஜின் குரூப்  கம்பெனியை தான் சாரும். அனைவரும் இவரின் தற்போதைய சாதனை பற்றி அறிவார்கள் எனினும், இவர் கடந்து வந்த பாதைகள் பற்றியும் டிஸ்லெக்சியா எனும் பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட இவரும், இவரை போன்ற சில குறைபாடுகளை கொண்டுள்ள நபர்கள் என இந்த சமுதாயத்தால் அடையாளம் காணப்பட்ட நபர்களும் (Albert Einstein, Steve Jobs, Daniel Radcliffe and more), தனது வாழ்வில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். அவர்கள் எவ்வாறு இந்த சாதனையை அடைந்தனர் எனவும், இந்த சமூகம் எதை அவர்களிடம் பிரச்சனையாக சுட்டிக்காட்டியதோ அதுவே அவர்களின் பலமாக மாறியது எப்படி என்பதைப்பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.


No Be a Unique Master :

இது போன்ற உள்ள அனைவரும் எவ்வாறு அவர்களின் பிரச்சனையை தாண்டி வாழ்வில் வெற்றி பெற்றனர் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னால் நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள “ஒவ்வொருவரும் அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்றும்,  அனைத்து  செயல்களிலும் வல்லுனர்களாக இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை”. ஆம், உலகில் உள்ள அனைவருக்கும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அரேபிய பாலைவனம் (Arabian Desert) அல்லது, இந்தியாவில் உள்ள தார் பாலைவனத்தில் (Thar Desert) வசிக்கும் மக்களுக்கு கட்டாயமாக நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை, ஏனெனில் அவர்கள் இயல்பாகவே நீர்நிலைகள் இல்லாத புவிப்பரப்பில் வாழ்கின்றனர் மிகவும் அரிதாகவே அவர்களுக்கு நீச்சல் என்பது அத்தியாவசியமாக இருக்கும். எனவே அவர்களுக்கு நீச்சல் என்பது கண்டிப்பாக  கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தேவை இல்லை. இது நீச்சல் என்பதற்கு மட்டுமல்ல  அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும்.



                     

Our Pros and Cons :

    ஒரு மனிதன் அனைத்து விஷயங்களிலும் வல்லுநராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் அல்லது பிரிவில் தனது திறனை வாழ்த்துக் கொண்டாலே அவர் சாதனையை அடைய இயலும். உதாரணமாக திறம்பட பொருளை சந்தைப்படுத்தும் திறனை கொண்ட நபர், சில சமயங்களில் ஆழ்ந்து சிந்தித்து கருத்துக்களை பரிமாறும் திறனை பெற்றிருக்க மாட்டார். புதிதாக தொழில்நுட்பத்தை அல்லது கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட நபர், பிறருடன் இயல்பாக பழகுவதில் பிரச்சனைகளுடன் காணப்படலாம் மேலும் எளிதில்  பல்வேறு மொழிகளை கற்கும் திறன் உடைய நபர் கணிதம் தொடர்பான  பாடங்களை கற்பதில் சிரமங்களை கொண்டிருப்பார். இதுபோன்ற அனைவருமே ஏதேனும் ஒரு  ஒருவகையில் சிலவற்றிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும், ஒரு சிலவற்றிற்கு குறைந்த அளவு கவனம் செலுத்தினாலே அதன் தரம் (Result) அபரிமிதமாக இருக்கும்.

 If you Focus on your Strengths, Negatives are Gradually reduced:

Psychology of Success

முந்தைய காலத்தில் ஒரு அரசன் தனது அமைச்சர்களில் யார் மிகவும் அறிவாளி என கண்டறிய முடிவு செய்தான். எனவே அதனைக் கண்டறிய அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரு போட்டியை அறிவித்தார். அந்த போட்டி என்னவென்றால், அந்த அரண்மனையின் ஒரு சுவரின்  மீது ஒரு கோடு ஒன்று வரையப்பட்டது. அமைச்சர்கள் அந்த கோட்டை தொடாமல், அதனை அழிக்காமல்  அதை சிறிய  கோடாக  மாற்ற வேண்டும். அந்த அரசனின் அனைத்து அமைச்சர்களும் அதில்   பங்கேற்று எவ்வாறு தொடாமல் ஒரு கோட்டை  சிறியதாக ஆக்குவது என தெரியாமல் இருந்தார்கள்.  எவராலும் மன்னரின் போட்டியை வெல்ல இயலவில்லை,

    

இறுதியாக அங்கு வந்த ஆசிரியர் ஒருவர் இந்த விபரங்களை அறிந்து போட்டியில் தான் பங்கு கொள்ளலாமா என அரசரிடம் கேட்டார். அதற்கு அவரும் ஒப்புக் கொள்ளவே அந்த சுவற்றிற்கு அருகில் சென்று,  ஏற்கனவே வரையப்பட்டு இருந்த கோட்டின் அருகில் அதைவிட பெரிய கோடு ஒன்றினை வரைந்து அரசரிடம் தாங்கள் ஏற்கனவே வரைந்த  கோடு சிறியதாகி விட்டது ஆனால் நான் அந்தக்  கோட்டை  தொடவில்லை அந்த கோட்டை நான் அழிக்கவில்லை என்றார். இதனைப் புரிந்து கொண்ட மன்னர், அவரை வெற்றி பெற்றவராக அறிவித்து அனைத்து அமைச்சர்களுக்கும் தலைவராக அந்த ஆசிரியரை நியமித்தார்.

அதாவது, அனைவருக்கும் இயல்பாகவே சில திறன்கள் இருக்கும். அதுபோலவே நமது குணாதிசயம் ஆனது சில செயல்களை நாம் அதிக அளவு   சிரமத்திற்கு    பின்பு தான் முடிக்க இயலும். நாம் நம்முடைய  பலத்தை அதிகரிக்கும் போது, நம்முடைய பலவீனம் இயல்பாகவே குறைந்துவிடும் என்பதை அறியலாம்.


Various Legends Need, Various Skills :

        மேலும் ஒரு குறிப்பிட்ட துறையில் நாம் எவ்வளவு காலத்தை செலவு செய்கிறோமோ அந்த அளவிற்கு,   நாம் அந்த துறையில் நமது திறனை மேம்படுத்திக் கொள்வோம். உதாரணமாக இந்திய கல்வி முறையில்  மாணவர்கள் தோராயமாக பத்து வருடங்கள் அனைவருக்கும் பொதுவாக  வகுக்கப்பட்ட குறிப்பிட்ட பாடங்களை கற்கிறார்கள். அந்த காலகட்டத்தில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு அந்த அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டும். அதன் பின்பு கல்லூரியில் தான் தேர்வு செய்யும் துறையில் நுட்பங்களை கற்று, அந்த துறையில் வல்லுனராக தனது வாழ்வை தொடங்குகிறார்கள்.

         இந்த நடைமுறையானது பெரும்பாலும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும், எனினும் கணக்காளராக தனதுவாழ்வை நடத்த முடிவு செய்த மாணவனுக்கும், மருத்துவராக  தனது வாழ்வை நடத்த முடிவு செய்த மாணவனுக்கும், புகைப்பட கலைஞர் (Photographer), வழக்கறிஞர் (Lawyer),  பொறியாளர் (Engineer), ராணுவ வீரர் (Soldier) போன்ற பல்வேறு துறைகளை தேர்வு செய்த அனைத்து மாணவர்களுக்கும் பத்து வருடங்களாக  அவர்கள் கற்கவேண்டிய  பகுதிகளாக  நிர்ணயிக்கப்பட்ட கல்வி பாடங்கள் ஒன்றேயாகும். வெவ்வேறு துறையைச் சார்ந்த  நபர்களுக்கும் ஒரே குறிப்பிட்ட பாடங்களை, பல வருடங்கள் கற்பிப்பதை காட்டிலும் அந்தந்த துறைகளுக்கு தொடர்புடைய தனித்துவமான பாடப் பகுதிகளை  அவர்களுக்கு  கற்பித்தால், அந்த மாணவர்கள் தங்கள் துறையில் மேலும் தனிச்சிறப்புடைய நபர்களாக விளங்குவார்கள்.

Turtle defeated rabbit in the Race:

  

Psychology of Success

 ஒரு காட்டில் அனைத்து விலங்குகளுக்கும் இடையே  விளையாட்டுப் போட்டியானது நடத்தப்பட்டது. அதில் அனைத்து விலங்குகளும் கலந்து கொள்ள வேண்டுமென நிபந்தனையும் விதிக்கப்பட்டது, அதன்படி ஓட்டப்போட்டியில் முயலும், ஆமையும் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். காட்டிலிருந்த அனைவருமே ஓட்டப்போட்டியில் முயல் தான் வெற்றி பெறும் என போட்டி நடக்கும் நாளுக்கு முன்பாகவே எண்ணிக்கொண்டு, ஆமையிடம் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என கூறினார், எனினும் அந்த போட்டியில் ஆமை ஆனது கலந்து கொண்டது. போட்டியாளர்கள் அந்த காட்டில் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும் முதலில் யார் அந்த  தூரத்தை அடைகிறாரோ அவரே வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. முயலும் நாம் தான் போட்டியில் வெல்ல போகிறோம் என அதீத நம்பிக்கை கொண்டிருந்தது. அடுத்த நாள் போட்டியும் துவங்கியது, முயலானது முதல் பாதி தூரத்தை விரைவாக கடந்து விட்டது, மேலும் ஆமை மிகக் குறைந்த  தூரத்தை தான் நடந்துள்ளது என்பதை பிற விலங்குகள்  கூற கேள்விப்பட்டது. எனவே முயலானது பாதி தூரத்தை கடந்து விட்டோம் என எண்ணி சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் ஓட்டப்பந்தயத்தை தொடரலாம் என முடிவு செய்து ஓய்வெடுக்க துவங்கியது.           

அந்த முயலானது ஓடி வந்த களைப்பில் அயர்ந்து மாலை வரை தூங்கி விட்டது. அது   உறக்கத்திலிருந்து எழுந்த பொழுது இருட்ட துவங்கிவிட்டது, நாம் வெகுதூரம் தூங்கி விட்டோம் என்பதை உணர்ந்த முயல் விரைவாக ஓடத்துவங்கியது. ஆனால் ஆமை ஆனது காலையிலிருந்து மெதுமெதுவாக நடந்து ஓட்டப் போட்டியை முடிக்கும் தருவாயில் இருந்தது, முயலும் தன்னால் இயன்றவரை வேகமாக ஓடியும் ஆமையால் ஜெயிக்க இயலவில்லை. இதில் முயல் தோற்றதற்கும், ஆமை வெற்றி பெற்றதற்கும் காரணம் ஆமை ஆனது தன்னிடம் வேகமாக ஓடும் திறன் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நீண்ட நேரமாக போட்டியில் ஓடிக்கொண்டிருந்தது. முயலானது வேகமாக ஓடும் திறன் இருந்தபோதிலும், இடையே தனது முயற்சியை நிறுத்திக் கொண்டதால் தோல்வியுற்றது. இது போலவே நாம் நம்முடைய திறனை மேம்படுத்திக்கொள்ள எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு அந்தத்துறையில் நம்முடைய திறனானது மேம்படும். 


Competition between Directors, Sportspersons, Hackers, and Scientists  :

    இதுபோலவே கற்றல் குறைபாடு ஆட்டிசம் மற்றும் பிற குறைபாடுகளை கொண்ட நபர்கள்  தங்களுக்கு இயல்பாகவே உள்ள திறனின் மீது அதிக காலம் கவனம் செலுத்தி அந்தத்துறையில் அவர்கள் வெற்றி அடைகின்றன உதாரணமாக ஆட்டிசம் போன்ற குறைபாடு உடையவர்கள் இயல்பாகவே இசை ஓவியம் போன்ற ஏதேனும் ஒன்றின் மீது அதிக ஆர்வம்  கொண்டே இருப்பார்கள் அவர்களை அந்தத் துறையில் அதிக காலம் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அந்த குறிப்பிட்ட துறையில் அவர்களுடைய திறனை வேறு எவராலும் முறியடிக்க இயலாது.


    உலகில் சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருதை பெரும் போட்டியில் பங்கேற்கும் அனைவரும்  தங்கள் வாழ்வில் அதிக காலத்தை திரைப்படத்துறையில் செலவு செய்தவர்களாக இருப்பார். மாறாக விளையாட்டு வீரரும், ஹேக்கர்கள், அறிவியல் மேதையும் அந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களின் திறனை வெளிப்படுத்தும் களம் வேறு, அதுபோலவே ஒவ்வொரு நபரும் அவருக்குள்  இருக்கும் இயல்பு திரைப்பட இயக்குனருக்குகானதா,  விளையாட்டு வீரருக்குரியதா அல்லது, அறிவியல் மேதைக்குரியதா என்பதை  கண்டறிந்து அவர்களுக்குரிய களத்தை தேர்ந்தெடுத்து, அதில் தனது திறனை மேம்படுத்த வேண்டும்.

                      

Psychology of Success

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்க :


இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்

ததனை யவன்கண் விடல்.

                                                                                     - திருக்குறள் எண்  517


 சிந்தித்துப் பாருங்களேன் தற்செயலாக கிரிக்கெட்  விளையாட்டு வீரர் சச்சின்  டெண்டுல்கர் இடம் அவருடைய தந்தை நீ மிகப்பெரிய இசையமைப்பாளராக வரவேண்டும் என்று  கூறியிருந்தாலும் அல்லது, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இடம் அவருடைய தந்தை நீ மிகப்பெரிய விளையாட்டு வீரராக வேண்டும் என்று கூறியிருந்தாலும், அவர்கள் இருவருமே இந்த உலகில் அடையாளம் கண்டு கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தனித்து திகழ்வதற்கு காரணம் அவர்களுடைய இயல்பான திறமையை வளர்த்துக்கொள்ள அதிக காலம் பயிற்சி செய்தனர், அந்த திறனில் அவர்கள் உச்சத்தை அடைந்தனர். அதுபோலவே நாம் அனைவரும் நம்முடைய திறன்களை அறிந்து அதனை மேம்படுத்திக்கொள்ள அதிக காலம் முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது நம்மால் அந்தத்துறையில் சாதனைகளை செய்ய வேண்டும் மேலே குறிப்பிட்ட பலரைப் போலவே தனித்துவமாக  இருக்க இயலும் .


Comments

Popular Posts

Psychology of Success (Untold - I) English

Psychology of Success: (Full Article) English

Psychology of Success (Untold - II) English